Tuesday, 15 November 2022

பிரிக்ஸ் உச்சி மாநாடு" என்றால் என்ன?.... இது எதற்காக உருவாக்கப்பட்டது?.... பலரும் அறியாத சுவாரசிய தகவல் இதோ....!!!!

 பிரிக்ஸ் உச்சி மாநாடு" என்றால் என்ன?.... இது எதற்காக உருவாக்கப்பட்டது?.... பலரும் அறியாத சுவாரசிய தகவல் இதோ....!!!!


பிரிக்ஸ் என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010 ஆம் ஆண்டு உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகின்ற நாடுகள் ஆகும். பிரிக்ஸ் மாநாடு என்றால் என்ன? அது எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது.


நான்கு நாடுகளின் தலைவர்கள் அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் பிரதமர்கள் பங்கேற்க ரஷ்யாவின் எகடரின் பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது.

அந்த மாநாட்டில் உலக பொருளாதார நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை பற்றி கவனம் செலுத்தப்பட்டன. பின்னர் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவை குறிக்க எஸ் என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிடப்பட்டது. பிரிக் கூட்டணியாக இருந்த இந்த நாடுகள் 2011 ஆம் ஆண்டு சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாறியது .

அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் 100 மில்லியன் முதலீட்டில் பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டது. அது ஷாங்காய் சீனா தலையிடமாக கொண்டு இயங்கும். 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா இணைவதற்கு முன்பு 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்ற நிலையில் ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது.

அடுத்ததாக நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றது. அதில் நாட்டின் குடிமை பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக் கொள்ளவும், நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஐந்து நாடுகளின் முதல் எழுத்தை கொண்டு தான் BRICS என்ற பெயர் உருவாக்கப்பட்டது. சர்வதேச பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது. உலக மக்கள் தொகையில் 40% பேர் பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பாகும். உலக வங்கி, IMF க்குபோட்டியாக நியூ டெவலப்மென்ட் பேங்க் என்ற பெயரில் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவாலாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்படுகின்றது.

பிரிக்ஸ் அமைப்பின் பத்தாவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் பர்க் நகரில் நடைபெற்றது. இறுதியாக கடந்த ஜூன் மாதம் 14 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. அனைத்து வளரும் நாடுகளுக்கும் பொதுவாக உள்ள பிரச்சனைகளை குறித்து விவாதிப்பதற்கும் உரையாடுவதற்குமான ஒரு தளமாக இது அமைந்துள்ளது. பலதரப்பு அமைப்பை சீர்திருத்தம் செய்து அதை அதிக பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளடக்கியதாக மாற்ற பிரிக்ஸ் நாடுகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.

இறுதியாக நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி பயிற்சி,குறு சிறு நடுத்தர தொழில்கள் போன்ற துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இருப்பது மக்களுக்கு பயன் அளிக்கின்றது. இந்த நாடுகளுக்கு இடையிலான இளைஞர்கள் பிரிக்ஸ் விளையாட்டு, சிவில் அமைப்புகள் ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு அதிகரித்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் மக்களுக்கு இடையேயான தொடர்பு வலுவடைந்துள்ளது.

No comments:

Post a Comment

குட்டி கதை

  ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்க...