தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழக அரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இதில் தற்போது பல்வேறு புதிய சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இணைய தளத்தின் மூலம் பென்சன்தாரர்கள் தங்களது பென்சன் தொகை உள்பட அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்துக்கொள்ள பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
பின்னர் தங்கள் பென்சன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கான மாதாந்திர பென்சன், இதர விவரங்கள் மற்றும் கடன் தொடரபான விவரம் முழுவதும் அறிந்து கொள்ளலாம்.
வயதான காலத்தில் ஓய்வூதியதாரர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக செல்வதை தவிர்க்கும் வகையில் https://tnpensioner.tn.gov.in/pensionportal/ இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ள.
No comments:
Post a Comment