Friday, 30 August 2024
Wednesday, 28 August 2024
பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது
பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது? அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? தெரிந்து கொள்ளலாம்
பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் உள்ளதற்கு அறிவியல் காரணம் உள்ளது. மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிகம் தெரியும். ஆகவே விபத்துகளை தவிர்க்க பள்ளி பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்படுகிறது. சிவப்பு நிறம் நீண்ட அலைநீளம் மற்றும் 650 நானோ மீட்டர்களை கொண்டது. இதன் விளைவாக, தொலைதூரத்திலிருந்து சிவப்பு நிறத்தை நம்மால் காண முடியும். ஆனால் மஞ்சள் நிறத்தின் அலைநீளம் வெறும் 580 நானோ மீட்டர்கள் மட்டுமே.இருந்தபோதும் பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், மஞ்சள் நிறத்திற்கான லேட்டரல் பெரிஃபெரல் விஷன்(எல்பிவி) சிவப்பு நிறத்தை விட 1.24 மடங்கு அதிகம். இதன் விளைவாக, அதன் பார்வை சிவப்பு நிறத்தை விட அதிகமாக உள்ளது.இதனால் மஞ்சள் நிறத்தை மழை மற்றும் மூடுபனியில் கூட நம்மால் தூரத்தில் இருந்து எளிதில் பார்க்க முடியும். எனவே பள்ளி வாகனம் நம் கண்ணில் படாவிட்டாலும் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் எளிதில் கண்டு பிடிக்க முடியும். அதனால்தான் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
Wednesday, 14 August 2024
NIRF RANKING 2024 ENGINEERING COLLEGE
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் தொடர்ந்து 6-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது
கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள்
(Teaching Learning & Resources),
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
(Research and Professional Practice),
பட்டப்படிப்பு
(Graduation Outcome),
வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம்
(Outreach & Inclusivity),
கருத்து (Perception)
ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.
இந்த நிலையில் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழு பட்டியல் இதோ..!
கல்லூரிபெயர் - தரவரிசையில்பெற்றுள்ளஇடம்
ஐஐடி சென்னை - 1
என்ஐடி திருச்சி - 9
விஐடி வேலூர்- 11
எஸ்.ஆர்.எம். கல்லூரி (S.R.M. Institute of Science and Technology), சென்னை - 13
அண்ணா பல்கலைக்கழகம் - 14
அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை - 23
கலசலிங்கம் கல்லூரி (Kalasalingam Academy of Research and Education), ஸ்ரீவில்லிப்புத்தூர் - 36
சாஸ்திரா பல்கலைக்கழகம் (Shanmugha Arts Science Technology & Research Academy), தஞ்சாவூர் - 38
எஸ்.எஸ்.என். கல்லூரி (Sri Sivasubramaniya Nadar College of Engineering), காலவாக்கம் - 46
சவீதா கல்லூரி (Saveetha Institute of Medical and Technical Sciences), சென்னை - 64
சத்யபாமா கல்லூரி (Sathyabama Institute of Science and Technology), சென்னை - 66
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) , கோவை - 67
ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி (Sri Krishna College of Engineering and Technology), கோவை - 83
வேல் டெக் கல்லூரி (Vel Tech Rangarajan Dr.Sagunthala R & D Institute of Science and Technology), சென்னை - 86
இதில் கடந்த ஆண்டு இடம்பெற்று இருந்த சென்னை, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இந்த முறை டாப் 100 இடத்தை இழந்துள்ளது.
Saturday, 3 August 2024
குட்டி கதை
ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்க...

-
Sslc maths tm ch-1 one mark , an interactive worksheet by lavanish live worksheets.com
-
CLICK HERE TO ANSWER THE QUESTIONS.
-
Sslc maths tm ch-2 onemark , an interactive worksheet by lavanish live worksheets.com