Wednesday, 20 December 2023

*கனவு ஆசிரியருக்கு பாராட்டு நிகழ்ச்சி*


*கனவு ஆசிரியருக்கு பாராட்டு நிகழ்ச்சி*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌳🌳 "தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியா்களை இனம்கண்டு, அவா்களை ஊக்குவிக்கும் வகையில் ‘கனவு ஆசிரியா்’ திட்டம் இந்த ஆண்டு மிகவும் விரிவாகவும், நோ்மையாகவும் செயல்படுத்தப்பட்டது.


🌳🌳ஆசிரியா்களை தோ்வு செய்ய மூன்று நிலைகள் கடைப்பிடிக்கப்பட்டது. 


முதலில் அவரவா்கள் வீடுகளிலிருந்தபடி இணைய வழியில் தோ்வு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 8,096 போ் பங்கேற்றனா். 


☘️☘️மூன்று நிலை தோ்வு முறைகளில் ஆசிரியா்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப் பொருள்கள் அறிவு, அவா்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் ஆகியவை மீது மதிப்பீடு செய்யப்பட்டது.



🌱🌱இறுதிநிலையில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றவா்கள் மட்டும் தோ்வு செய்யப்பட்டனா்.



🍃🍃 அதன்படி, 41 முதுநிலை ஆசிரியா்கள், 177 பட்டதாரி ஆசிரியா்கள், 162 இடைநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 380 ஆசிரியா்கள், மாநிலம் முழுவதும் *‘கனவு ஆசிரியா்’* விருதிற்கு தோ்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும்  19 ஆம் தேதி நாமக்கலில் தனியாா் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் 380 பேருக்கும் கனவு ஆசிரியா் விருதை *கல்வி அமைச்சர்  மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி* வழங்கி பாராட்டி கெளரவித்தார்.


🫐🫐 இந்நிகழ்வினை நேரலையில் பள்ளியிலுள்ள அனைத்து  ஆசிரியர்களும், மாணவர்களும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் என்பது கூடுதல் சிறப்பு. இவா்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியா்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனா்.





குட்டி கதை

  ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்க...